ஜெயிலர் திரைப்படம்:
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ஜெயிலர்.” மேலும் இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது.
தற்பொழுது வரை ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலைய்யா இணைந்துள்ளனர். இதனை தொடர்ந்து படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அத்துடன் படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்கிறார்.
நாகர்ஜுனா நடிக்க வாய்ப்பு:
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜுனாவை படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள கூலி திரைப்படத்திலும் நாகர்ஜுனா நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நாகர்ஜுனா நடிக்க ஒப்புக்கொண்டால் அடுத்தடுத்து ரஜினியுடன் இரண்டு திரைப்படங்களில் நாகர்ஜுனா நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நாகர்ஜுனா – தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- TNUSRB தமிழ்நாடு முழுவதும் சிறை வார்டர் வேலைவாய்ப்பு 2025! 180 காலியிடங்கள் | புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு!
- REPCO Bank Clerk Recruitment 2025! 30 CSA பதவிகள் அறிவிப்பு
- Coimbatore Statistics office Recruitment 2025! தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்தால் போதும்!
- LIC நிறுவனத்தில் AAO வேலைவாய்ப்பு 2025! 841 காலியிடங்கள் || செப்டம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்!
- SSC OTR 2025: விண்ணப்பதாரர்கள் பதிவு விவரங்களைத் திருத்த மற்றொரு வாய்ப்பு