எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் – 2030ம் ஆண்டுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் செயல்பாடு நிறுத்தம் !

தற்போது எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் வரும் 2030ம் ஆண்டுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் செயல்பாடு நிறுத்தம் செய்யப்படுவதால் விண்வெளி மையத்தை பூமிக்கு கொண்டுவர விண்கலம் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வானில் உள்ள கோள்கள் மற்றும் நடச்சத்திரங்கள், பால்வெளி மண்டலத்தின் செயல்பாடுகள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்ய விண்வெளி ஆய்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. விண்வெளியில் நிகழக்கூடிய மாற்றங்கள், காலநிலை மாற்றம், கோள்களின் தன்மை போன்றவற்றை இந்த விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்து வருகிறது.

வரும் 2030 ஆம் ஆண்டுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்திக்கொள்ளப்பட உள்ளது. அந்த வகையில் விண்வெளியில் செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பூமிக்கு பாதுகாப்பாக கொண்டுவருவதற்கான விண்கலத்தை உருவாக்க எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து US Deorbit Vehicle என்ற பெயரில் அந்த விண்கலத்தை உருவாக்க சுமார் ரூ.7000 கோடி மதிப்புக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமான பெண்களுக்கு பணி இல்லை – ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு !

மேலும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பூமிக்கு கொண்டு வந்து பசிபிக் பெருங்கடலில் ஓரிடத்தில் வைக்க நாசா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment