தேசிய நல்லாசிரியர் விருது 2024 – தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு

நடப்பாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது 2024 பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். national best teacher award 2024

இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளானது ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மத்திய அரசு சார்பில் நாட்டின் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

இதனையடுத்து இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதானது தமிழ்நாட்டில் மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முரளிதரன் மற்றும் வேலூர் ராஜகுப்பம் பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கோபிநாத் ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான 50 பேரின் பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்ட நிலையில், அதில் தமிழகத்தில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முரளிதரன், வேலூர் ராஜகுப்பம் பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கோபிநாத் ஆகியோர் தேசிய அளவில் நல்லாசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குடியாத்தம் ஒன்றியம், ராஜகுப்பம் பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் கோபிநாத் என்பவர் தெருவிளக்கு கோபிநாத் என்று அழைக்கப்படுபவர்.

நாட்டுப்புற கலைகள் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முடியும் என்பதை நிறுவி நடைமுறைப்படுத்தி வருபவர்.

பொறியியல் படிப்பு துணைக்காலந்தய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – தொழில்நுட்ப கல்வி இயக்கககம் தகவல் !

தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் 50,000 ரூபாய் ரொக்கப் பரிசும், வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது

Leave a Comment