ஜனநாயகன் திரைப்படத்துடன் மோதும் பராசக்தி? – ரிலீஸ் தேதி குறித்து சுதா கொங்கரா தகவல்!
நடிகர் சிவகார்த்திகேயன்:
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் அவர் நடிப்பில் வெளியான அமரன் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
JOIN WHATSAPP TO GET TAMIL CINEMA NEWS
இதற்கிடையில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் பராசக்தி படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures நிறுவனம் தயாரிக்கிறது.
பராசக்தி திரைப்படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் படத்தின் நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். குறிப்பாக ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். அந்த வகையில் சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
பராசக்தி ரிலீஸ் சுதா கொங்கரா தகவல்:
இதனை தொடர்ந்து பராசக்தி திரைப்படம் குறித்து பேசிய அப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா, பராசக்தி திரைப்படத்தில் இன்னும் 40 நாட்களுக்கான படப்பிடிப்பு காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது என்றும், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மதராஸி’ படப்பிடிப்பிற்காக இலங்கையில் இருக்கிறார் என்றும். அதை முடித்துக்கொண்டு அவர் நாடு திரும்பியதும் பராசக்தி படப்பிடிப்பை தொடங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் பராசக்தி படம் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதும் என்று நாங்கள் அறிவிக்க இல்லை என்றும். மேலும் படத்தின் ரிலீஸ் முடிவை தயாரிப்பாளர்கள் மட்டுமே எடுப்பார்கள்” என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
- NTPC நிறுவனத்தில் 150 Deputy Manager பணியிடங்கள் அறிவிப்பு 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!
- தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2025! 38 காலியிடங்கள் || சம்பளம்: ரூ 65,000/-
- வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000/-
- 2025 இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
- ஜனநாயகன் திரைப்படத்துடன் மோதும் பராசக்தி? – ரிலீஸ் தேதி குறித்து சுதா கொங்கரா தகவல்!