மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் இவர்தானா ! திமுக சார்பில் சு.வெங்கடேசன் ! அதிமுக சார்பில் டாக்டர்.சரவணன் போட்டி – அனல் பறக்கும் மதுரை அரசியல் களம் !

மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் இவர்தானா. தற்போது நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல்கட்டத்திலேயே நடைபெற இருப்பதால் ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு போன்ற தேர்தல் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் அடுத்தகட்டமாக வேட்புமனுத்தாக்களில் தீவிரம் காட்டிவருகின்றனர். மேலும் தமிழகத்தில் பாஜக சார்பில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.

மதுரை மக்களவை தொகுதியில் பாஜகவின் சார்பாக அந்த கட்சியின் மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் தற்போது MP யாக உள்ள சு.வெங்கடேசன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டார் தொகுதியாக மாறிய விருதுநகர் ! பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டி – விஜய பிரபாகரனை வேட்பாளராக அறிவித்த தேமுதிக !

இந்நிலையில் அதிமுக கட்சியின் சார்பில் டாக்டர்.சரவணன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளார். இதனால் மதுரை அரசியல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Leave a Comment