சென்னையில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் 2024 – முழு விவரம் இதோ !

தமிழ்நாட்டில் சென்னையில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் 2024 அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களிலும் , தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிக அளவில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை – 32 கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களும் இணைந்து 25.10.2024 அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாமினை நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில் 20 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். அந்த வகையில் 8 ம் வகுப்பு, 10 ம் வகுப்பு, 12 ம் வகுப்பு, ஐஐடி, டிப்ளமோ, கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் போன்ற கல்வி தகுதி கொண்ட வேட்பாளர்கள் கலந்து கொள்ளலாம்.

CANARA BANK ஆட்சேர்ப்பு 2024 ! Ombudsman பணியிடம் அறிவிப்பு !

வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடுபவர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW

Leave a Comment