ரெட் பஸ் செயலியில் கூடுதல் கட்டணம் வசூல் – திருப்பி வழங்க நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு !

தற்போது ரெட் பஸ் செயலியில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் கட்டணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்கள் பொது விடுமுறை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Red Bus app booking Additional fare collection Minister Sivasankar Refund action

அதன் பின்னர் சனி, ஞாயிறு போன்ற இரண்டு தினங்களும் என தொடர் விடுமுறை என்பதால் மக்கள் தங்களது சொந்த ஊருக்க படையெடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் தமிழக அரசு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

இதுதொடர்பாக, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவிக்கையில் ரெட் பஸ் செயலியில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டிருந்தால் அந்த கட்டணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும் இது போன்று பிற செயலிகளில் கூடுதல் கட்டணம் தொடர்பான புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Comment