அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்களை ஓராண்டிற்குள் அகற்றவேண்டும் – கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்களை ஓராண்டிற்குள் அகற்றவேண்டும். நீதிமன்றங்கள் அவ்வப்போது சிறப்பு வாய்ந்த உத்தரவுகளை ஆளும் அரசுகளுக்கு பிறப்பித்து வருகிறது. இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றம் அந்த மாநில அரசுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் உள்ள அரசிற்கு சொந்தமான நிலத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள கோவில்கள், மசூதி மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு கட்டிடங்களையும் ஓராண்டிற்குள் அகற்ற வேண்டும் என்று மாநில அரசிற்கு கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவ்வாறு அரசு நிலத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்களை அகற்ற உத்தரவிட்ட நீதிபதி, மேலும் தூணிலும் துரும்பிலும் உள்ள கடவுளுக்கு அரசு நிலத்தை ஆக்ரமித்து கட்டிடம் எழுப்ப தேவையில்லை என்றும்,

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

அந்த நிலமானது மக்களுக்கு பயன்பட்டால் கடவுள் இன்னும் மகிழ்ச்சி தான் அடைவார் என்று கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment