சிந்தலக்கரை ஸ்ரீ வீரபையம்மாள் ஸ்ரீ மாலையம்மாள் கோவில் கும்பாபிஷேகம் 2024 ! முழு விபரங்கள் !

தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை ஸ்ரீ வீரபையம்மாள் ஸ்ரீ மாலையம்மாள் கோவில் கும்பாபிஷேகம் 2024. பொன் விஸ்வகர்மா (செங்கூர் வாளு) குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ வீரபையம்மாள் திருக்கோவிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் திருவிழா வருகிற ஆனி மாதம் 23 ம் தேதி(07.07.2024), ஞாயிற்று கிழமை அன்று நடைபெற உள்ளது. திருவிழா குறித்த முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

திருவிழாகும்பாபிஷேகம்
கோவில் விஸ்வகர்மா குலதெய்வம்
இடம்சிந்தலக்கரை – தூத்துக்குடி மாவட்டம்
நாள்07 ஜூலை 2024
கும்பாபிஷேகம் 2024

தூத்துக்குடி மாவட்டம் , எட்டயபுரவட்டம், சிந்தலக்கரையில் அமைந்துள்ளது பொன் விஸ்வகர்மா(செங்கூர் வாளு ஆதித்ய சேனரிஷி கோத்திரம்) குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ வீரபையம்மாள், ஸ்ரீ மாலையம்மாள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பராயர் தெய்வங்கள். இக்கோவிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் திருவிழா வருகிற ஆனி மாதம் 23 ம் தேதி(07.07.2024), ஞாயிற்று கிழமை காலை 6.00 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் நடைபெற உள்ளது. சீரும் சிறப்புடன் நடைபெற உள்ள இந்த விழாவில் நமது குலதயாதிகள், சம்பந்த காரர்கள், ஊர் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் பரிபூர்ண அருளை பெற வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

குரோதி வருடம் ஆனி 21 ம் நாள் (05.07.2024) வெள்ளிக்கிழமை அன்று…

காலை 5.00 மணிக்கு – மங்கல இசை, ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, மஹா ஸங்கல்பம், புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், அங்குரார்ப்பணம், ராக்ஷப்பந்தனம்(கங்கணம் கட்டுதல்), வாஸ்து பூஜை, ஹோமம், பலி. கணபதி ஹோமம், லக்ஷ்மி குபேர ஹோமம், அஸ்வ பூஜை, கோ பூஜை, கஜ பூஜை.

காலை 10.00 மணிக்கு – கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகபூஜை,ஹோமம், வேதிகாராதனை, வேத பாராயணம், ஸர்வதோபத்ர மண்டல பூஜைகள், லலிதா சஹஸ்ரநாம ஹோமம், ஸகல தேவதா மூல மந்திர ஹோமங்கள்.

மதியம் 1.00 மணிக்கு – பூர்ணாஹூதி, மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.

சிந்தலக்கரை ஸ்ரீ வீரபையம்மாள் ஸ்ரீ மாலையம்மாள் கோவில் கும்பாபிஷேகம் 2024

மாலை 4.30 மணிக்கு – மங்கல இசை, பிம்ப சுத்தி(பக்தர்கள் கொண்டு வரும் தீர்த்தம் கொண்டு அபிஷேகம்)

இரவு 6.00 மணிக்கு – இரண்டாம் காலயாக பூஜைகள், வேத பாராயணம், சதுஷ்ஷஷ்டி யோகினி மண்டல பூஜைகள், ஸகல தேவதா மூல மந்திர ஹோமங்கள்.

இரவு 9.00 மணிக்கு – பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.

குரோதி வருடம் ஆனி 22 ம் நாள் (06.07.2024) சனிக்கிழமை அன்று..

காலை 5.30 மணிமுதல் 6.45 மணிக்குள் – அனைத்து தெய்வங்களுக்கும் யந்திர பிரதிஷ்டை தொடர்ந்து அஷ்டபந்தன மருந்து சாற்றுதல்.

காலை 8.30 மணிக்கு – மங்கல இசை, 3 ம் கால யாகபூஜை ஆரம்பம், வேதபாராயணம், ஸகல தேவதா மூலமந்திர ஹோமங்கள், நவகிரஹ மண்டல பூஜைகள்.

ஆனி உத்திர தரிசனம் 2024 ! அற்புத பலன்களை நம் வாழ்வில் வழங்கும் திருமஞ்சனம் (12-07-2024) வழிபடும் முறை !

மதியம் 12.30 மணிக்கு – பூர்ணாஹூதி, மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.

மாலை 5.30 மணிக்கு – மங்கல இசை, 4 ம் கால யாகபூஜை, வேதபாராயணம், ஸுக்தாதி ஹோமங்கள், ஸகல தேவதா மூலமந்திர ஹோமங்கள், க்ஷேத்ர பாலக மண்டல பூஜை, விஷ்ணு ஸஹஸ்ரநாம ஹோமம்.

இரவு 9.00மணிக்கு – பூர்ணாஹூதி, மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.

குரோதி வருடம் ஆனி 23 ம் நாள் (07.07.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று..

காலை 3.30 மணிக்கு – மங்கல இசை, 5 ம் கால யாகபூஜை, வேதபாராயணம், நியாஸ பிரகரணம், நாடீ சந்தானம், ஸகல தேவதா மூலமந்திர ஹோமங்கள், ஸ்பார்ஷாஹூதி.

Join WhatsApp Group

காலை 5.30 மணிக்கு – மஹா பூர்ணாஹூதி.

5.45 மணிக்கு – கலசங்கள் புறப்பாடு.

காலை 6.00- 6.40 மணிக்குள் – மிதுன லக்கனத்தில் அனைத்து கோபுரங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம்.

8.00 – 10.00 மணிக்குள் – அனைத்து தேவதைகளுக்கும் அனைத்து பொருட்களை கொண்டு மஹா அபிஷேகம், கலச தீர்த்த அபிஷேகம்.

காலை 10.15 மணிக்கு – தச தரிசனம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், கங்கண விசர்ஜனம், மஹா அன்னதானம் நடைபெறும்.

Leave a Comment