தமிழக அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், சமூக நல அலுவலகத்தில் பணி !
சமூக நலத்துறை சார்பில் தமிழக அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 வெளியாகியுள்ளது. இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. மேலும் இந்த பணியானது பெண்களுக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, பணியமர்த்தப்படும் இடம் ஆகியவற்றின் முழு விவரம் குறித்து காண்போம்.
நிறுவனம் | சமூக நலத்துறை |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை |
வேலை இடம் | சிவகங்கை |
தொடக்க நாள் | 21.06.2024 |
கடைசி நாள் | 01.07.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://sivaganga.nic.in/ |
தமிழக அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
இளநிலை உதவியாளர் / தட்டச்சர் – JUNIOR ASSISTANT CUM TYPIST
சம்பளம் :
தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அடிப்படை கணினி பயன்பாட்டில் (COA / BCA /MCA ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சிவகங்கை – தமிழ்நாடு
TNPSC குரூப் 1 இலவச மாதிரி தேர்வு 2024 ! மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் முன்பதிவு செய்யலாம் !
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் இணைத்து சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பித்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 01.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
தகுதியான வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு :
மேலே குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு தகுதி வாய்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
தமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு | View |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.