இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை அனுமதிக்க முடியாது – இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க பேச்சு !

தற்போது இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை அனுமதிக்க முடியாது என்று இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் லங்கை மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று பேச்சு

கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையில் நடைபெற்ற ஒன்பதாவது அதிபர் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் என்ற சிறப்பை பெற்றறார்.

அந்த வகையில் இலங்கை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், மேலும் படகுகளை சேதப்படுத்துவதுடன், அவற்றை பறிமுதல் செய்வதுடன் மீனவர்களை சிறைப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசநாயக்க இந்திய மீனவ்ரகள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளார்.

தன்னை உலகநாயகன் என அழைக்க வேண்டாம் கமல்ஹாசன் கருத்து – கமல் என்றோ KH என்றோ அழைக்கலாம் !

இலங்கைக்கு சொந்தமான பகுதிகளில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைந்து மீன் பிடிப்பது தடுக்கப்படும் என்றும், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று யாழ்ப்பாணத்தில் நடந்த நாடாளுமன்ற பொதுக்கூட்டத்தில் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Comment