CAA சட்டத்தை எதிர்த்து விஜய் வெளியிட்ட அறிக்கை ! அடிப்படை புரிதல் இல்லாத தவெக தலைவர் விஜய் – நடிகை கஸ்தூரி சாடல் !
CAA சட்டத்தை எதிர்த்து விஜய் வெளியிட்ட அறிக்கை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி கட்சி நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் அனைத்து தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை போன்ற செயல்களின் மூலம் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மத்திய அரசு கொண்டுவந்த CAA சட்டத்தை எதிர்த்து விஜய் வெளியிட்ட அறிக்கை பேசுபொருளாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
விஜய்யை கண்டித்த நடிகை கஸ்தூரி :
பிளவுவாத CAA சட்டம் ஏற்புடையதல்ல என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவ்வாறு விஜய் வெளியிட்ட அறிக்கையை கண்டித்த நடிகை கஸ்தூரி, சரியான புரிதல் இல்லாமல் அறிக்கை வெளியிடுவது விஜய்க்கு நல்லதல்ல என்று கூறிய அவர் மாறாக,
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ! மும்பை பேரணியில் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் – எச்சரிக்கை விடுத்த மராட்டிய நவநிர்மாண் சேனா !
இங்குள்ள இஸ்லாமியர்கள் CAA சட்டத்தின் மூலம் வெளியேற்ற படுவார்கள் என்ற தவறான பரப்புரையை தான் விஜய் கண்டித்திருக்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி சாடியிருக்கிறார்.