மைசூர் சேண்டல் சோப் நிறுவன விளம்பர தூதராக தமன்னா ஒப்பந்தம் – கன்னட மக்கள் எதிர்ப்பு! முழு விவரம் இதோ!

தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெயிட் 2 மற்றும் ஒடேலா 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தமன்னா கடைசியாக தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

இந்நிலையில் பிரபல சோப் நிறுவனமான மைசூர் சேண்டல் நடிகை தமன்னாவை அவர்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தனர் என்பது குறிப்பிடத்தள்ளது. இதன் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் தமன்னாவின் ஒப்பந்தத்தை கன்னட மக்கள் எதிர்த்து ” ஏன் கன்னட திரையுலகில் திறமைக்கு பஞ்சமா? உள்ளூர் நடிகையை நியமிக்காதது ஏன்?” என கேள்வி கேட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் பதிலளிக்கும் விதமாக அம்மாநில அமைச்சர் எம்.பி பாட்டில் மைசூர் சேண்டல் சோப்பை கர்நாடகாவிற்கு வெளியிலும் கொண்டு செல்லவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Leave a Comment