திருப்பதி லட்டை தொடர்ந்து பழனி பஞ்சாமிருதத்தில் கலப்படமா ? – தமிழ்நாடு அரசு விளக்கம் !

திருப்பதி லட்டை தொடர்ந்து பழனி பஞ்சாமிருதத்தில் கலப்படமா என்ற சர்ச்சை எழுந்த நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது தற்போது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாத லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்தும், மேலும் கடந்த ஆட்சியின் போது லட்டு தயாரிப்பில் நடந்துள்ள தவறுகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலருக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் திருப்பதி லட்டு விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில் தற்போது பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க, தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்திலிருந்து நெய் வாங்கப்பட்டதாக வதந்திகள் பரவியது.

சென்னையில் அடுத்தடுத்து பிரியாணி கடைகளுக்கு சீல் – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !

இந்நிலையில் பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து பெறப்படுவதாக தமிழக அரசின் சார்பில் இது சமய அறநிலையத்துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.

Leave a Comment