ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி – தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி. தமிழ்நாடு அளவில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாநில அளவிலான கருத்தாளர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி வரும் ஜூன் 18 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சியை ஜூன் 24 முதல் 29 ஆம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல் – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !

எண்ணும் எழுத்தும் பயிற்சி முறை என்பது விளையாட்டு முறையை பின்பற்றி கற்பிக்கப்படும் கற்பித்தல் முறையாகும்.

Leave a Comment