வரும் 18 ஆம்தேதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !

வரும் 18 ஆம்தேதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையம் கட்சிக்கான அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் பற்றி அறிவிக்கப்படும் என்று விஜய் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும் மற்றும் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் – தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு !

இதனை போன்று கடந்த வருடமும் நடிகர் விஜய் பொதுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment