திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி – ரூ.1,15,790 பணத்தை திருடிய பெண் ஊழியர்கள்

தற்போது திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி யின் போது பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் உண்டியல் பணத்தை திருடியதாக கூறி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சுப்பிரமணியசாமி திருக்கோயில் உள்ளது. இது முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற படை வீடுகளில் ஒன்றாகும்.

அந்த வகையில் இந்தத் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துவது வழக்கம்.

இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகளை எண்ணுவதற்கு திருக்கோயிலில் பொறுப்பு அதிகாரி இணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில்,

150க்கும் மேற்பட்ட திருக்கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள் ஆகியோர் மலைக்கோவில் வசந்த மண்டபத்தில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் பணியாளர்கள் திருக்கோயில் உண்டியல் பணம் எண்ணும் பொழுது அவர்கள் அந்தப் பணத்தை எடுத்து மறைப்பது போல் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து திருக்கோயில் அதிகாரிகள் இதனை கவனித்து அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். உடனடியாக திருத்தணி காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அந்த வகையில் விரைந்து வந்த திருத்தணி போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருத்தணி முருகன் கோயிலில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் வைஜெயந்தியிடமும், திருக்கோயிலில் நாதஸ்வரம் வாசிக்கும் நிரந்தர பணியாளர் தேன்மொழியிடமும் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து இருவரும் உண்டியல் பணத்தை எண்ணும் பொழுது திருடிய பணத்தை வைஜெயந்தியுடன் சேர்ந்து மலைக்கோவில் கழிவறைக்கு சென்று தங்களது உள்ளாடையில் மறைத்து வைத்துள்ளதை உறுதி செய்த போலீசார் இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !

அதன் பின்னர் இந்த இரண்டு பெண் பணியாளர்களிடமிருந்தும் ரூபாய் 1,15790 லட்சம் பணம் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த திருட்டு சம்பவம் திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்கதர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இவர்கள் எத்தனை நாள் இது போல் உண்டியல் பணம் என்னும் போது திருடி உள்ளனர் என்ற நோக்கில் திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment