சாரைப்பாம்பை கொன்று சமையல் செய்த இளைஞர் – கைது செய்து வனத்துறை நடவடிக்கை !

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாரைப்பாம்பை கொன்று சமையல் செய்த இளைஞர். மேலும் இவ்வாறு வீடியோ பதிவு செய்த நபர் மீது தமிழக வனத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பத்தூர் மாவட்டம் அருகே உள்ள பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் ராஜேஷ்குமார். இவர் சாரைப்பாம்பு ஒன்றை அடித்து கொன்றுள்ளார். இதனையடுத்து அந்த சாரைப்பாம்பின் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் பாம்பின் தோலை உரித்து தண்ணீரில் அலசும் காட்சிகளை வீடியோ பதிவாக எடுத்து அதனை வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சாரைப்பாம்பை சமைத்து சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் அவர் மீது வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தல் ஆணையரை சந்திக்கும் விஜயபிரபாகரன் – மறுவாக்கு எண்ணிக்கை கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல் !

மேலும் ராஜேஷ்குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்டதை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Comment