தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம் – துரைமுருகனுக்கு புதிய இலாக்கா ஒதுக்கீடு ! முழு விவரம் இதோ!

கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, தமிழ்நாடு அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அந்த வகையில் மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டு பல்வளத்துறை அவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, தற்போது மூத்த அமைச்சர்களான துரைமுருகன் மற்றும் ரகுபதி ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ரகுபதி வசம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமைச்சர் ரகுபதியிடமிருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் வசம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நிதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மிகவும் வலுவான துறையான, கனிமத்துறை துரைமுருகனிடம் இருந்து பறிக்கப்பட்டது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, துரைமுருகன் நீர்வளத்துறை உடன் சட்டத்துறையையும் கூடுதலாக நிர்வகிக்க உள்ளார். அதேநேரம், ரகுபதி இயற்கை வளம் உள்ளிட்ட இயற்கை வளம் துறையை கவனிக்க உள்ளார்.

Leave a Comment