TNPSC Annual Planner 2025 – வெளியான அறிவிப்பு !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC Annual Planner 2025 சார்பில் தற்போது 2025 ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை தற்போது TNPSC யின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு பணிகளில் சேர தயாராகி வருபவர்கள் தற்போது இந்த 025 ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
TNPSC Annual Planner 2025
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தேர்வுகளின் ஆண்டுத்திட்டம் 2025 :
தேர்வின் பெயர் | அறிவிக்கை வெளியீட்டு நாள் | தேர்வு தொடங்கும் நாள் | தேர்வு நடைபெறும் நாட்களின் எண்ணிக்கை |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – I (தொகுதி I பணிகள்) | 01.04.2025 | 15.06.2025 | 1 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (தொகுதி IV பணிகள்) | 25.04.2025 | 13.07.2025 | 1 |
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள் ) | 07.05.2025 | 21.07.2025 | 4 |
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் ) | 21.05.2025 | 04.08.2025 | 7 |
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி தரம்) | 13.06.2025 | 27.08.2025 | 5 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) | 15.07.2025 | 28.09.2025 | 1 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – தொகுதி VA பணிகள் | 07.10.2025 | 21.12.2025 | 1 |
குறிப்பு :
தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக மட்டும் இந்த உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியிடப்படுகிறது.
ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம்.
தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவை அறிவிக்கை வெளியிடும் நாள்வரை மாற்றங்களுக்கு உட்பட்டது.
மறைந்த ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது – அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் வெளியிடப்படும்.
அறிவிக்கை தொடர்பான விவரங்களுக்கு தேர்வாணைய இணையதளத்தினை தொடர்ந்து கவனித்து வர வேண்டும்.