இன்றைய தங்கம் விலை நிலவரம் (28.10.2024) ! முழு விவரம் இதோ !

தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரம் (28.10.2024) பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் தற்போது தங்கம் விலை சரிந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. today gold rate in tamilnadu 28.10.2024

தற்போது தீபாவளி இன்னும் இரண்டு தினங்களில் வர உள்ளதால் ஆபரணங்களை வாங்குவதற்கு விருப்பப்படுவர். அந்த வகையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் தற்போது தங்கம் விலை சரிந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் சென்னையில் இன்று (அக்டோபர் 28, 2024) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 45 ரூபாய் குறைந்து ரூ.7,315-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.360 ஆக குறைந்து ரூ.58,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனையடுத்து இன்றைய 24 காரட் ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.45 சரிந்து ரூ.7,820 ரூபாய்க்கு விற்பனையாகத் தொடங்கியுள்ளது. மேலும் 8 கிராம் தங்கத்தின் விலையும் இன்று 360 ரூபாயாக குறைந்து ரூ.62,560-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதுரை – கோவை மெட்ரோவிற்கு முன்னுரிமை – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் !

இந்நிலையில் அக்டோபர் 28, 2024 ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.107-க்கு விற்கப்பட்டு வருகிறது.மேலும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.107,000 ஆகவும் கடந்த நான்கு நாட்களாக வெளியானது அதே விலைக்கு விற்பனையாகி வருகிறது.

Leave a Comment