சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை – கடல் சீற்றம் அதிகரித்ததால் நடவடிக்கை !

சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை. ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து கொண்டு செல்கிறது. மேலும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு வருவது வழக்கம். ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சென்று அந்த காட்சியினை கண்டு மகிழ்வர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடல் பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாக தெரிகிறது. இதன் காரணமாக சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தனுஷ்கோடி வரும் வாகனங்களை ஆரம்பத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வேற்று மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு – கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகையை விட 140% அதிகம் !

மேலும் தனுஷ்கோடி கடல் பகுதியில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகே சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment