திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் – சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை !

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல். சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில் அதிகளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்து, இதனை தொடர்ந்து பயணிகளுடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அந்த வகையில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டதில் பயணி ஒருவர் தனது தொடைப் பகுதியில் கால் முட்டிக்கு அணிவிக்கும் நீ கேப் போன்று அணிந்திருந்தது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த பயணியை தனியாக அழைத்து சென்று அவருடைய உடமைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகு அவருடைய தொடைப்பகுதியில் அணிந்திருந்த நீ கேப்பில் தங்கத்தை பேஸ்ட் போன்று உருக்கி எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த பயணியின் உடைமைகளில் துணிகளுக்கு நடுவில் தங்க சங்கிலிகளை மறைத்து எடுத்து வந்ததும் சோதனையில் சிக்கியது. இதனையடுத்து அந்த பயணி கடத்தி வந்த தங்க நகைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1.424 கிலோ தங்கத்தின் சர்வதேச விலையானது 1 கோடியே 3 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment