TVK தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் – எப்போது தெரியுமா ?

நடைபெற்று முடிந்த மாநில மாநாட்டை தொடர்ந்து TVK தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நிர்வாகிகளை கட்சியில் இணைப்பது போன்ற பணிகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார்.

அந்த வகையில் இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் தவெக தலைவர் விஜய் தன்னுடைய கொள்கை தலைவர்கள் மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பது குறித்து பேசி இருந்தார்.

இதனையடுத்து விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு தலைவர்களும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாநில மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என மண்டலம் வாரியாக பல்வேறு மாவட்டங்களில்,

தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளை அடுத்த மாதம் சந்திக்க திட்டமிட்டுள்ள விஜய், மாநாட்டிற்காக சிறப்பாக பணிகளை செய்து முடித்தவர்களுக்கு கட்சியில் பதவி தரத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2026ல் இலக்கை அடைவோம் TVK தலைவர் விஜய் அறிக்கை – தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி !

இதனையடுத்து இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு,

வரும் டிசம்பர் மாதம் மண்டல வாரியாக நடிகர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதனை போல் சுற்றுப்பயணத்தின் போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேர விரும்பும் மாற்றுக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை கட்சியில் இணைப்பது போன்ற பணிகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Comment