கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் ? – முழு தகவல் இதோ !

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் 42 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, சேலம், ஜிப்மர் போன்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 16 பேர்களின் நிலை கவலைக்கிடம் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை !

கள்ளச்சாராய விவகாரத்தில் தனது எக்ஸ் தள பதிவில் தமிழக அரசை குற்றம்சாட்டி பதிவிட்டிருந்தார். இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் ஆறுதல் தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கள்ளக்குறிச்சிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment