வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு ! ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரால் நிறுவப்பட்ட சத்திய ஞானசபை அமைந்துள்ளது. மேலும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில், வடலூரில் உள்ள வள்ளலார் சர்வதேச மையம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சர்வதேச மையம் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

இதனையடுத்து சத்தியஞான சபை பெருவெளியில் பக்தர்களின் வழிபாட்டிற்கு இடையூறாக இந்த வள்ளலார் சர்வதேச மையம் அமையக்கூடாது எனவும், இதனை வேறு ஒரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

அந்த வகையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் வள்ளலார் சர்வதேச மையம் அமைவதில் என்ன பிரச்சனை உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 106 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட சத்யஞான சபை அப்படியே இருக்கவேண்டும் என்பதுதான் வள்ளலாரின் விருப்பம் என்று வாதிட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம் ! இந்தந்த விஷயங்களுக்கு தடை !

இந்நிலையில் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே வள்ளலார் சர்வதேச மையம் கட்டப்படும் என்று தமிழக அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும் 106 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட சத்யஞான சபை இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அறங்காவலர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment