ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் பேசிய வீடியோ – பேசுபொருளான நிலையில் விளக்கம் !

தற்போது ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் பேசிய வீடியோ எக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு பேசுபொருளான நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் .

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என வேண்டும்’ என்று ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பேசிய வீடியோ ஒன்று வெளியான நிலையில் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது. vck president Thirumavalavan

அவ்வாறு வெளியான வீடியோவில், ”தமிழ்நாட்டில் இதற்கு முன்பு யாரும் கூட்டணி ஆட்சியில் குரலை உயர்த்தினார்களோ இல்லையோ 2016ல் கூட்டணி ஆட்சியில் என்ற குரலை உயர்த்திய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அந்த வகையில் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்டோம்.

இதற்க்கு முன் இருந்த கட்சிகளெல்லாம் இப்படி பேசினார்களா என்று தெரியவில்லை. இதனை தொடர்ந்து கேபினட்டில் இடம் வேண்டும் என்பது பவர் ஷேர். கூட்டணியில் இடம் வேண்டும் என்பது சீட் ஷேர் என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.

தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர் ‘எனக்கு தெரியவில்லை என்னுடைய அட்மின் போட்டு இருப்பார்’ என தெரிவித்துவிட்டு சென்றார்.

கலைஞர் நினைவு நாணயம் விற்பனை – விலை எவ்வளவு தெரியுமா ?

இதற்க்கு முன் மது ஒழிப்பு மாநாட்டிற்கு மதுவை ஒழிக்க வேண்டும் என நினைக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும்,

மேலும் அதிமுகவினர் கூட அந்த மாநாட்டில் பங்கேற்கலாம் என என்று பேசியிருந்தது பேசுபொருளாகி இருந்த நிலையில், தற்போது ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று திருமா பேசிய வீடியோ நீக்கப்பட்டது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Comment