விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படத்தின் டீசர் அப்டேட் – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. மேலும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அத்துடன் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் ஜன நாயகன் திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விஜய் முழுநேர அரசியலில் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

ஜன நாயகன் படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

மேலும் விஜய் நடிக்க வேண்டிய காட்சி பகுதிகளின் படப்பிடிப்பு பணிகள் இந்த இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என படக்குழு தெரிவித்துள்ளது. அதன் பிறகு ஜன நாயகன் படத்தின் மொத்த படப்பிடிப்பு பணிகளும் 15 முதல் 20 நாட்களில் முடிவடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி படத்தின் டீசரை படக்குழு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Comment