
தவெக முதல் மாநாடு நடக்குமா: தமிழ் சினிமாவில் ஐகானிக் ஹீரோவாக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது அவர் சினிமாவை முழுவதுமாக விட்டு அரசியலில் இறங்க இருக்கிறார். அதன்படி இப்பொழுது அவரின் கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். ஒரு பக்கம் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டுக்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
தவெக முதல் மாநாடு
அதன்படி வருகிற அக்டோபர் 27 ம் தேதி விக்கிரவாண்டியில் வி கிராமத்தில் மாநாடு நடைபெற இருக்கிறது. சமீபத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பூமி பூஜைகள் செய்து பந்தக்கால் நடப்பட்டது. எனவே ரசிகர்கள் முதல் தொண்டர்கள் வரை தற்போது த வெ க கட்சியின் முதல் மாநாடுக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் திடீரென விக்கிரவாண்டி பகுதியில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த இடம் முழுவதும் வெள்ளக்காடாக மாறி இருக்கிறது. அதுமட்டுமின்றி இன்னும் வரும் நாட்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தி பிக்பாஸ் 18ல் நுழைந்த தமிழ் பெண் – அந்த பிரபலம் யாருன்னு தெரியுமா?
இப்படி கனமழை காரணமாக மாநாடு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்படி தண்ணீர் தேங்கி இருப்பதால் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
இந்த போட்டோவில் இருக்கும் கனவுக் கன்னி யார் தெரியுமா?
தளபதி 69 படத்தில் இணைந்த CWC கோமாளி – யாருன்னு தெரியுமா?