முதியவர்களே ஹாப்பி நியூஸ்.., இனி 50 வயது தண்டுனா போதும்..,, பென்ஷன் கன்பார்ம்.., மாநிலஅரசு முக்கிய அறிவிப்பு!!
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏழை எளிய மக்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதில் மிகவும் முக்கியமான திட்டம் என்றால் முதியவர்களின் பென்ஷன் திட்டம் தான். இந்த திட்டத்தின் மூலம் முதியவர்கள் பெரும்பாலான பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சில மாநில அரசு அவ்வப்போது பென்ஷன் பணம் அதிகரித்து வருகிறது.
மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.., சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மருத்துவர் அறிவுறுத்தல்!!
அந்த வகையில் அண்மையில் கூட தெலுங்கானாவில் முதியோருக்கு 2000 பென்ஷன் பணம் வழங்கி வந்த நிலையில், 4000 உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் முதியோர் பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இனிமேல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பென்ஷன் பணம் வழங்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.