அடக்கடவுளே., ஒரே குடும்பத்தில் 16 பேர் மர்மமான சாவு.., குழப்பத்தில் காவல்துறை.., பின்னணி என்ன?

ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

16 பேர் மர்ம சாவு

இன்றைய காலகட்டத்தில் குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் ஒன்றாக இருந்து வருவது தான் ஹைதி . அதற்கு அருகில் உள்ள செகுயின் என்ற பகுதியில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 நபர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக அவர்களது வீட்டில் கிடந்துள்ளனர். அவர்களின் சாவு குறித்து பேசிய அக்கம்பக்கத்தினர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

இது குறித்து அதிகாரி பேசியதாவது, உயிரிழந்த 16 பேரின் இறுதி சடங்கு முடிந்த ஒரு நாளுக்கு பின்னர் தான் அவர்களின் இறப்பு குறித்த தகவல் எங்களுக்கு கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தென்கிழக்கு துறை உயரதிகாரி, காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் அப்பகுதிக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது மாதிரியான சம்பவங்கள் அந்த பகுதியில் அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

அந்த நடிகரும் இல்ல.., இந்த ஹீரோவும் இல்ல.., விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் சேரும் வாரிசு கதாநாயகன்!!

Leave a Comment