2024 ஆஸ்கர் விருதுகள்.., ஏழு விருதுகளை தட்டி தூக்கி சாதனை படைத்த பிரபல திரைப்படம் – முழு லிஸ்ட் இதோ!!

2024 ஆஸ்கர் விருதுகள்

திரைத் துறையில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு கலைஞனும் பெரிதாக கருதப்படுவது என்னவென்றால் ஒரு விருது தான். இந்த விருதுகளில் உயரிய விருதாக எல்லோரும் நினைப்பது ஆஸ்கர் விருது தான். ஒவ்வொரு வருடமும் சிறந்த படம், நடிகர், நடிகை என திரைத்துறையில் சம்பந்தப்பட்ட அனைத்துக்கும் உலக அளவில் எது சிறந்தது என்று தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கூட ராஜமவுலி இயக்கிய RRR திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடலுக்கும், பொம்மன் – பெள்ளி தம்பதியை வைத்து எடுக்கப்பட்ட ‘தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2024க்கான ஆஸ்கர் லிஸ்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு,

  • சிறந்த படம் –  ஒப்பன்ஹெய்மர்
  • சிறந்த இயக்குநர் – கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)
  • சிறந்த நடிகர் – சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)
  • சிறந்த துணை நடிகர் – ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)
  • சிறந்த நடிகை – எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
  • சிறந்த துணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)
  • சிறந்த சர்வதேச படம் – தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்
  • சிறந்த அசல் திரைக்கதை – அனாடமி ஆஃப் எ ஃபால்
  • சிறந்த தழுவல் திரைக்கதை – அமெரிக்கன் ஃபிக்‌ஷன்
  • சிறந்த அனிமேஷன் படம் – தி பாய் அண்ட் தி ஹெரான்
  • சிறந்த ஆவணக் குறும்படம் – தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்
  • சிறந்த ஆவணப்படம் – 20 டேஸ் இன் மரியுபோல்
  • சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் – தி ஒண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர்
  • சிறந்த அனிமேஷன் குறும்படம் – வார் இஸ் ஓவர்
  • சிறந்த பின்னணி இசை – ஒப்பன்ஹெய்மர்
  • சிறந்த பாடல் – வாட் வாஸ் ஐ மேட் ஃபார்? (பார்பி)
  • சிறந்த ஒளிப்பதிவு – ஒப்பன்ஹெய்மர்
  • சிறந்த படத்தொகுப்பு – ஒப்பன்ஹெய்மர்
  • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – காட்ஜில்லா மைனஸ் ஒன்
  • சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – புவர் திங்ஸ்
  • சிறந்த ஆடை வடிவமைப்பு – புவர் திங்ஸ்
  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – புவர் திங்ஸ்
  • சிறந்த ஒலி – தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்

அண்ணனுடன் அந்த மாதிரி உறவு வைக்கணும்.., தூண்டிவிடும் கணவர்.., கதறி அழுத பிரபல சீரியல் நடிகை!!

.

Leave a Comment