ஐசியூவில் பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவ உதவியாளர்., இளம்பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம்!!

ICUவில் மருத்துவர் பார்த்த வேலை

தற்போதைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு கடுமையான தண்டனைகள் கொண்டு வந்த போதிலும், தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ராஜஸ்தானில் ICUவில் இருந்த பெண்ணை மருத்துவ உதவியாளர் பாலியல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் இடம்பெற்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை காரணமாக 24 வயதுள்ள இளம்பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) வைக்கப்பட்டிருந்த நிலையில், சிராக் யாதவ் என்ற நபர் மருத்துவ உதவியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த சமயத்தில் அந்த பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சிஅடைந்த அந்த இளம் பெண் கூச்சலிட்ட போது அவருக்கு மயக்க ஊசி போட்டு மயக்கமடைய செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை தொடர்ந்து மயக்க தெளிந்த அந்த பெண் தனக்கு நடந்தவற்றை கணவனிடம் கூறியுள்ளார். எனவே இதுகுறித்து கணவர் போலீசில் புகார் கொடுத்த நிலையில், சிராக் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடி காரில் கெத்தாக வந்து ஏ.ஆர்.ரகுமான்.., தீடிரென ஆட்டோவில் போக என்ன காரணம்?.., நடந்தது என்ன?

Leave a Comment