அமரன் திரைப்படம்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் தற்போது அடுத்த தளபதி இவர் தான் என்று ரசிகர்கள் கொண்டாடி வரும் ஹீரோ என்றால் அது சிவகார்த்திகேயன் தான். ஆனால் அதை விஜய் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனால் சிவாவை சிலர் கழுவி ஊற்றி வந்த நிலையில், அடுத்த தளபதி நான் கிடையாது அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கிடையில் கமல் தயாரிப்பில் அவர் நடித்த அமரன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இருப்பினும் முஸ்லிம்களை தவறாக காட்டி இருப்பதாக சில சர்ச்சைகளும் கிளம்பின. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அவருடைய ரசிகர்கள் அடுத்த அப்டேட்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமரன் படம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் 55 கோடி கொடுத்து வங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் வெளியான மாவீரன் படத்தை அமேசான் நிறுவனம் 35 கோடி கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து பார்க்கும் பொழுது சிவகார்த்திகேயனின் வளர்ச்சி ஏறு முகத்தை நோக்கி செல்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
அடக்கடவுளே.., நடிகர் அஜித்குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதி.., மேனேஜர் சொன்ன ஷாக் தகவல்!!
