மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.., முன்னாள் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு – வெளியான ஷாக்கிங் நியூஸ்!!

பாலியல் தொல்லை

உலகத்தில் பல்வேறு நாடுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் குறைந்த பாடில்லை. அந்த வகையில் தற்போது முன்னாள் முதலமைச்சர் மீது பாலியல் வழக்கு கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான எடியூரப்பாவிடம் கல்வி தொடர்பாக  உதவி கேட்டு சென்ற 17 வயது மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த இளம் வயது பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறை முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டம் மற்றும் IPC 354 (A) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், முன்னாள் முதலமைச்சரும் பாஜக முக்கிய தலைவர் போக்சோ சட்டம் பாய்ந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மக்களே.., வெப்பத்தை தணிக்க வரும் கனமழை.., எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?.., வானிலை மையம் தகவல்!!

Leave a Comment