ஆளுநர் பதவியை  திடீரென ராஜினாமா செய்த தமிழிசை.., காரணம் என்ன?.., மக்களவைத் தேர்தலில் போட்டியா?

மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற இருப்பதாக சமீபத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து மக்களின் வாக்குகளை குவிக்க தற்போது இருந்தே தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநில ஆளுநராக கடந்த 2019ம் ஆண்டு தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டார். மேலும் இவர்  கடந்த 2021ல் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

மேலும் இவர் கடந்த தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழிக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். எனவே தற்போது நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் அவர் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை பகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இப்படி இருக்கையில் தமிழிசை செளந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தமிழிசை பொறுப்பு வகித்து வந்த தெலுங்கானா மாநில ஆளுநர் பதவி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பையும் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கு அனுப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. 

மது பிரியர்களே ஷாக்கிங் நியூஸ்.., இந்த தேதியில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..,மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

Leave a Comment