2 கோடி கடனுக்காக 4 கோடி மதிப்பு சொகுசு கார் எரிப்பு – குற்றவாளியை வலை வீசி தேடி வரும் போலீஸ்!!
தெலுங்கானாவில் கொடுத்த கடனை திருப்பி கொடுக்காததால் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 கோடி கடனுக்காக 4 கோடி மதிப்பு சொகுசு கார் எரிப்பு
தெலுங்கானா மாநிலம் அகமது என்பவர் நீரஜ் என்பவருக்கு சுமார் 2 கோடி ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக கொடுத்த கடனுக்கு அசலும் வட்டியும் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார் நீரஜ். பலமுறை அவர் வீடு தேடி சென்ற கடனை கேட்ட போதிலும் அவர் பல காரணங்கள் கூறியுள்ளார். இதனால் நீராஜிடம் இருந்து 4 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி சொகுசு காரை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட நீரஜ், அகமதுக்கு தெரியாமல் அந்த காரை தனது நண்பர்கள் உதவியுடன் விற்க முயற்சி செய்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனால் ஆத்திரம் அடைந்த அகமது நீரஜ் வீட்டு வாசல் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லம்போர்கினி சொகுசு கார் மீது தீ வைத்து கொளுத்தி தப்பி சென்றுள்ளார். இப்படி 2 கோடிக்காக 4 கோடி காரை தீ வைத்து கொளுத்தி விட்டதாக கூறி காவல்துறையிடம் நீரஜ் புகார் கொடுத்துள்ளார். அவரின் புகாரின் பேரில் அகமதை காவல்துறை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.