ஐஸ்கிரீம் சாப்பிட்டு இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு – தீவிர சிகிச்சையில் தாயார் – போலீஸ் வலைவீச்சு!!
ஐஸ்கிரீம் சாப்பிட்டு இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு: தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், இதனால் மக்கள் குளிர்பான பொருட்களை தேடி ஓடுகின்றனர். அதிலும் குறிப்பாக ஐஸ் கிரீமை தான் மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். அப்படி விரும்பிச் சாப்பிட்ட 2 குழந்தைகள் தற்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஐஸ் கிரீம் விற்பனை செய்து வருகிறார். வழக்கம் போல் விற்பனை செய்து வந்த அவரிடம் ஒரு தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து கொஞ்ச நேரத்திற்கு பிறகு ஐஸ்கிரீம் சாப்பிட்ட 3 பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த பூஜா, பிரசன்னா என ஒன்றரை வயது இரட்டைக் குழந்தைகள் வீட்டிலேயே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மயங்கிய நிலையில் இருந்த அவர்களது தாயை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து அக்குழந்தைகளின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை ஐஸ் கிரீம் விற்ற அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.