கள்ளழகர் நாளை புறப்பாடு 2024 – நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க?

கள்ளழகர் நாளை புறப்பாடு 2024

இதையடுத்து வரும் செவ்வாய்க்கிழமை( ஏப்ரல் 23) அன்று தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் தங்கியிருந்த கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் எழுந்தருள இருக்கிறார். இதனை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் திரளும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனை தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சல் வைபவம் நடைபெறும் நிலையில், இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் சுவாமி தங்குகிறார்.  அடுத்த நாள் (ஏப்ரல் 24) வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் மோட்சம் அளித்த பிறகு, ஏப்ரல் 25-ல் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளிய பின்னர் ஏப்ரல்  26-ல் கள்ளழகர் மதுரையில் இருந்து அழகர் மலைக்கு புறப்பட்டு  27-ஆம் தேதி இருப்பிடம் சேருகிறார். இறுதியாக 28-ல் உற்சவ சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

ஒரு லட்சம் வாக்காளர்கள் மறுப்பு – மீண்டும் நடக்க இருக்கும் தேர்தல் – அண்ணாமலை கொடுத்த கோரிக்கை !!

Leave a Comment