மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்த முதல்வர் முக ஸ்டாலின் – கையில் கஞ்சா பொட்டலத்துடன் வந்த பாஜக நிர்வாகி!!
மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்த முதல்வர் முக ஸ்டாலின்: தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மேற்கொண்டு வந்தார். தற்போது தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில் அவர் தனது குடும்பத்துடன் இன்று கொடைக்கானல் புறப்பட்டுள்ளார். அதன்படி அவர் மதுரைக்கு விமான நிலையத்திற்கு வந்த பிறகு, அங்கிருந்து சாலை வழியாக அவர் கொடைக்கானல் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று அவர் தனது குடும்பத்துடன் மதுரை விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், தமிழக பாஜக ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டி புகார் ஒன்றை அளிக்க முற்பட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்போது அவர் கையில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளதை பார்த்த பாதுகாப்பு போலீசார் உடனே அவரை சுற்றிவளைத்து அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர். இதை தொடர்ந்து அவர் கையில் இருந்த கடிதத்தை வாங்கி படித்த போது, தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். எனவே இதன் காரணமாக அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இதனால் மதுரை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.