மணிப்பூர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: குற்றவாளிகளுக்கு துணை போன போலீசார் – சிபிஐ அதிர்ச்சி தகவல்!
மணிப்பூர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘மைதேயி’ சமூக மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ‘குக்கி’ பழங்குடியின மக்கள் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் போது குக்கி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற இளைஞர்கள் சிலர், அந்த பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மணிப்பூர் பாலியல் வன்கொடுமை விவகாரம்
அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் அந்த கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை காவல்துறை கைது செய்தது. அதில் ஒரு சிறுவனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயற்சி செய்த இளைஞர் கைது – தேனி மாவட்டத்தில் பரபரப்பு!!
இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் அவர்களிடமிருந்து தப்பி ஓடிய போது, போலீஸ் ஜீப்பில் ஓடிச் சென்று ஏறியுள்ளனர். தங்களை காப்பாற்றுமாறு ஜீப் ஓட்டுநர் காவல்துறையிடம் கேட்டு கொண்டுள்ளார். ஜீப்பை ஓட்டிச் சென்று கலவரக் கும்பல் அருகே நிறுத்தியுள்ளார். இந்த கொடூரத்தில் மேலும் சில போலீஸாரும் உடனிருந்தனர் என்று சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!