தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்து வருகிறது. இப்போது அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துள்ளதால் மேற்கொண்டு சூரியனின் திருவிளையாடல் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த வெயிலால் சில உயிர் சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு குளு குளு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதாவது இந்த கடுமையான வெப்பத்தால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில் அவர்களை குளிர்விக்கும் விதமாக இன்று மதியம் 1 மணி வரை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி,  தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர்,விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதியம் 1 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

PF அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 50 ஆயிரம் போனஸ் – யாருக்கெல்லாம் கிடைக்கும், நீங்க இந்த லிஸ்ட்ல இருக்கீங்களானு செக் பண்ணுங்க !!

Leave a Comment