கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவ உதவி ! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவ உதவி. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளைக்காக, கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது சொந்த பொறுப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த 5 கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய மக்களுக்கு உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த தொகையானது 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.

அத்துடன் 2005 நவம்பர் முதல் தற்போது வரை வழங்கிய நிதி சுமார் ரூ.5 கோடியே 99 லட்சத்து 90 ஆயிரம் ஆகும்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் – 51 நாட்களுக்குப் பின் அதிரடி உத்தரவு!

இந்நிலையில் இந்த மாதம் ஏழை எளிய மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் என திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment