சென்னையில் அரசு பள்ளியில் நடக்கும் சிறப்பு வகுப்புகள் – நோக்கம் என்ன தெரியுமா? ஆசிரியர்கள் அதிருப்தி!
சென்னையில் அரசு பள்ளியில் நடக்கும் சிறப்பு வகுப்புகள்: தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதாவது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதித்திருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் சென்னையில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது சென்னை அரும்பாக்கம் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். தமிழக அரசின் உத்தரவை மீறி முதன்மை கல்வி அலுவலர்கள் சிறப்பு வகுப்புகள் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தான் அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடப்பதாக கூறப்படுகிறது.