பிரபல நடிகரை கொடூரமாக தாக்கிய கும்பல் – வெளியான ஷாக்கிங் வீடியோ!

பிரபல நடிகரை கொடூரமாக தாக்கிய கும்பல்: கன்னட திரையுலகில்  பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் சேத்தன் சந்திரா. அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்து வரும் இவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் முகம் முழுவதும் காயங்கள் இரத்த கரையுடன் பேசியுள்ளார். அதாவது அன்னையர் தினத்தை முன்னிட்டு அவர் தனது அம்மாவுடன் ஒரு கோவிலுக்கு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து வீடு திரும்பும் போது அந்த பக்கம் வந்த போதை ஆசாமி ஒருவர் தனது காரை பின் தொடர்ந்து சேதப்படுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை விசாரித்தபோது பின்னால் வந்த 20 பேர் என்னை தாக்கத் தொடங்கினர். இதனால் எனக்கு அதிகமாக பலத்த காயம் ஏற்பட்டது. என்னை தாக்கியவர்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக சேத்தன் சந்திரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அவரை தாக்கிய 2 பேரை காவல்துறை கைது செய்தனர். பின்பு காவல்துறை ஜாமீனில் விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம் –  மே 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Leave a Comment