ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ? – முழு தகவல் இதோ !

ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு. இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த நிலையில், அந்த வகையில் நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனையடுத்து மருத்துவ படிப்பில் சேர்வதற்காக மாணவர்களுக்கான விண்ணப்பதிவுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு வரும் ஜூன் 16 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ஜூன் 16 ஆம் தேதி விண்ணப்பபதிவு தொடங்கக்கூடும்.

இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 9050 மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 20 ஆம் தேதிக்கு மேல் தொடங்கும் என்றும், மேலும் 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள 5050 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 3400 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார் – எதற்காக தெரியுமா?

மேலும் மேற்கண்ட மருத்துவ படிப்புகளுக்கு tnmedicalselection.net என்ற இணையத்தளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment