சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம் – கோடை விடுமுறை முடிவுற்ற நிலையில் அறிவிப்பு !

சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம். கோடை விடுமுறை முடிவுற்ற நிலையில் இன்று முதல் சென்னை உயர்நீதிமன்ற பணிகள் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம் கோடைகாலத்தை ஒட்டி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு ஆகியவற்றிக்கு விடுமுறை விடப்பட்டது. அந்த வகையில் மே 2ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டாலும் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக வாரம் 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இதன் அடிப்படையில் முதல் வாரத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தலைமையிலும், இரண்டாவது வாரத்தில் நீதிபதி பி.டி.ஆஷா தலைமையிலும், 3வது வாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலும், 4வது வாரத்தில் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் தலைமையிலும் அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டன.

இதனையடுத்து நேற்றுடன் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு கோடை விடுமுறை முடிவடைந்தன. எனவே ஒரு மாத கால கோடை விடுமுறைக்குப் பின் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் மீண்டும் முழு அளவில் வழக்கம் போல் செயல்பட உள்ளது.

மேற்குவங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு … என்ன காரணம் தெரியுமா? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

அத்துடன் கடந்த மே மாதம் முழுவதும் விடுமுறை காலத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் நீதிமன்றங்கள் முழுமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment