மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பெயரில் ஆபாச வீடியோ – கல்லூரி மாணவர் அதிரடி கைது!

நடிகரும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பெயரில் ஆபாச வீடியோ: சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கட்சி சார்பாக நின்று வெற்றி பெற்றவர் தான் நடிகர் சுரேஷ் கோபி1. இவர் தற்போது மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் அவருடைய பெயரில் ஆபாச பேச்சுடன் கூடிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தற்போது அந்த வீடியோ பூதாகரமாக வெடித்த நிலையில், இதுகுறித்து திருச்சூர் மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் ஹரி என்பவர் பீச்சி காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் அந்தப்படி, காட்டூர் அருகே கீழுப்பள்ளிக்கரா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஷியாம்(23) என்பவருக்கு இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்த காவல்துறை, அந்த இளைஞரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவனை விசாரித்த போது இந்த தவறை நான் தான் செய்தேன் என்று ஒப்புக்கொண்டான்.

Also Read: சாத்தூரில் பட்டாசு ஆலை வெடித்து 3 பேர் பலி – தீவிரம் காட்டும் மீட்பு படையினர்!!

மேலும் அந்த வீடியோ அண்மையில், சுரேஷ் கோபி பீச்சி பகுதிக்கு வந்த போது அவரும், ஹரியும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த காட்சியை தான் ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இப்படி ஒரு மத்திய அமைச்சர் பெயரில் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  1. Union Minister Suresh Gopi news ↩︎

Leave a Comment