கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டனை – மதுவிலக்கு திருத்தம் தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தை புரட்டி போட்ட கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டனை: சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரத்தில், கள்ளச்சாராயம்1 குடித்து குடிமகன்கள் பலியான சம்பவம் நாடெங்கும் உலுக்கியது. இதில் 60க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இன்னும் சிலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிழல் தமிழக முதல்வர் இறந்த குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி நிவாரணம் அறிவித்திருந்தார். இதை பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்போருக்கு தண்டனையை கடுமையாக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Read Also: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பெயரில் ஆபாச வீடியோ – கல்லூரி மாணவர் அதிரடி கைது!

அதன்படி சட்ட திருத்த மசோதாவை மதுவிலக்கு துறை அமைச்சர் சு.முத்துசாமி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ” இனி கள்ளச்சாரயத்தை தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ரூ.10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் கள்ளசாராயத்தை காய்ச்சி விற்க பயணப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். அதுமட்டுமின்றி உரிமை பெறாத இடத்தில் மது அருந்த கூடாது என்றும், அந்த இடத்தை மூடி சீலிடப்பட்ட என்று சட்டம் திருத்தப்பட்டுள்ளது. 

  1. tamilnadu kallasaarayam latest news ↩︎

Leave a Comment