அமேசானில் ஆர்டர் செய்த பிக்பாஸ் அனிதா சம்பத் – பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி – அடக்கடவுளே … இப்படியும் நடக்குதா?

Breaking News அமேசானில் ஆர்டர் செய்த பிக்பாஸ் அனிதா சம்பத்: தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் இருந்து வருகிறது. இதை சிலர் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நூதன முறையில் பண மோசடி செய்து வருகின்றனர்.

குறிப்பாக சொல்ல போனால் அமேசான் ஆன்லைன் ஆர்டரில் ஆர்டர் செய்யும் ஒரு பொருளாக இருந்தாலும் வந்து சேருவது வேறு ஒரு பொருளாக இருக்கிறது என்று பலரும் புகார்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் அதே போல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான அனிதா சம்பத் சமீபத்தில் அமேசானில் ஸ்டோரேஜ் பாக்ஸ் வாங்க வேண்டும் என்று ஆர்டர் செய்துள்ளார். கடந்த ஜூன் 13ஆம் தேதி அந்த பொருள் எனக்கு டெலிவரி ஆன நிலையில், அதை நான் பிரித்துப் பார்க்கவே இல்லை. கொஞ்சம் பிஸியாக இருந்ததால் அதை மறந்துவிட்டேன்.

Also Read: பிக்பாஸ் ராஜுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட் – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

தற்போது தான் அதை பிரித்து பார்த்தேன். அதில் மிகவும் துர்நாற்றம்  அடைந்த ரேஷன் கடை புடவையை விட மோசமான நிலையில் ஒரு புடவை இருக்கிறது. இதை நான் இப்பொழுது என்ன செய்வது. Return செய்யும் தேதியும் முடிந்து விட்டது. இதற்கு அமேசான் நிறுவனம் பதில் சொல்ல வேண்டும். நான் இதற்கு என்ன செய்யலாம் என்று ரசிகர்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.   

Leave a Comment